கரூர் துயரம்.. விஜய் பேருந்தின் CCTV காட்சிகள் சிபிஐ வசம் ஒப்படைப்பு.. முக்கிய ஆதாரங்கள் சிக்குமா?

vijay 1

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் கடந்த 5-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வந்தது.


இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டது..  அதன்படி தற்போது இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. காவல்துறை அதிகாரிகள், வீடியோகிராபர்கள், ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள், உரிமையாளர்கள் என 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

அந்த வகையில் நேற்று 2-வது நாளாக ஆம்புலன்ஸ் ட்ரைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.. அதே போல் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.. மேலும் விஜய்யின் பிரச்சார பேருந்தின் சிசிடிவி காட்சிகளை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியிருந்தது.

இந்த நிலையில் கரூர் சென்ற போது விஜய்யின் பிரச்சார பேருந்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.. கரூரில் உள்ள தான் தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் சிசிடிவி ஹார்டிஸ்க் ஒப்படைக்கப்பட்டது..  தவெக பனையூர் அலுவலகத்தின் உதவியாளர் குரு சிசிடிவி ஹார்டிஸ்கை சிபிஐ வசம் ஒப்படைத்தார்.. இந்த வழக்கில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் இந்த சிசிடிவி காட்சிகளில் ஏதேனும் ஆதாரங்கள் சிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Read More : அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற ரஜினிகாந்த்..!

RUPA

Next Post

ஒரே முதலீட்டில் வாழ்நாள் முழுவதும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறலாம்.. LIC-ன் அற்புதமான திட்டம்.!

Sat Nov 8 , 2025
ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத் திட்டத்தை அனைவரும் இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும். அது அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிக்கும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஜீவன் சாந்தி பாலிசியைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு சிறந்த பாலிசி. இது உங்களுக்கு ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும். நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC, உங்கள் எதிர்கால நிதித் தேவைகளுக்கு பாதுகாப்பான விருப்பங்களை வழங்குகிறது. ‘ஜீவன் சாந்தி’ […]
LIC 1

You May Like