கரூர் பெருந்துயரம்.. விஜய்க்கு அடுத்த சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் புதிய மனு..

TVK Vijay 2025 2

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. விஜய்யின் கால தாமதமான வருகையால் இந்த கூட்ட நெரிசல் நடந்ததாகவும், தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையும் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. ஆனால், தாங்கள் முதலில் கேட்ட இடத்தை அரசு வழங்கவில்லை, ஆம்புலன்ஸ் ஏன் வந்தது, இரவில் ஏன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என பல கேள்விகளை எழுப்பினர்..


ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினரோ இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை.. இதுகுறித்து பலரும் விஜய்யை விமர்சித்து வந்த நிலையில் கூட்ட நெரிசல் நடந்து 3 நாட்களுக்கு பிறகு விஜய் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.. அந்த வீடியோவில் தவறுக்கு பொறுப்பேற்காமல், தமிழக அரசை குற்றம்சாட்டி பேசியிருந்தார்.. மேலும் ‘சி.எம். சார்.. உங்களுக்கு என்னை பழிவாங்கனும்னா என்னை எதுவேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று பேசியிருந்தார்.. அவரின் இந்த வீடியோவுக்கும் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதில் “ கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை.. வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக்கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, கட்சி தலைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : மக்கள் பாதிக்கப்பட்ட போது டிக்கெட் போட்டு சென்னை செல்லவா? விஜய்க்கு செந்தில் பாலாஜி கொடுத்த தரமான பதிலடி..

RUPA

Next Post

ரூ.1,19,500 சம்பளம்.. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

Wed Oct 1 , 2025
Employment for ex-army personnel.. Tamil Nadu government's super announcement..!!
tn govt jobs 1

You May Like