தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படும் மற்றொரு 15 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுமி, கடந்த ஓராண்டு காலமாகத் தேனி பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள், பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, காணாமல் போன சிறுமியின் தாய் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீசாரின் விசாரணையில், அதே கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றதும், தனது பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரிய வந்தது.
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வரும் அந்தச் சிறுவன் இருக்கும் இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுவனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : அன்புமணியால் வெடித்த பூகம்பம்..!! பாமகவில் இருந்து விலகுகிறார் ஜி.கே.மணி..? அதிர்ச்சியில் ராமதாஸ்..!!



