Breaking : கிட்னி முறைகேடு வழக்கு.. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கமாட்டோம்.. உச்சநீதிமன்றம் அதிரடி..

supreme court 2025

நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.


தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்தும், பணத்திற்காக தரகர்கள் மூலம் உறுப்புகளை பெற்று மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளன என்பதும் தெரிய வந்தது. மேலும், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த Transplant Coordinator மூலம் சில ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனால், இந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு வுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது சிறப்பு விசாரணைக்குழு விசாரணை மேற்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் நாங்கள் நியமிக்கும் அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறுகிறது.. அது நிர்வாக ரீதியில் சிக்கலை ஏற்படுத்தும்.. எனவே நாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளை வைத்து கிட்னி முறைகேடு வழக்குகளை விசாரணை செய்ய வலியுறுத்துகிறோம்..” என்று தமிழக அரசு தரப்பு வாதிட்டது.

அப்போது நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மட்டும் இத்தனை மேல் முறையீடுகள் வருகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. அப்போது தமிழக அரசு தரப்பு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை நாங்கள் எதிர்க்கவில்லை.. அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருந்து சிறந்த அதிகாரிகளை பரிந்துரைக்கிறோம்.. அதில் இருந்து நீதிமன்றம் குழு அமைக்கட்டும் என்று தெரிவித்தது.

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அதிலிருந்து நாங்கள் முரண்படுகிறோம் என்று தெரிவித்தனர்.. மேலும் சிறப்பு விசாரணை குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், சிறப்பு விசாரணைக் குழு அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கூறியிருந்த கருத்துகளை மட்டும் நீக்குவதாக கூறிய நீதிபதிகள் தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கையும் முடித்து வைத்தனர்..

Read More : Flash | ஐடி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! சென்னை ஒன், இன்போசிஸ் அலுவலகங்களில் சோதனை..!! ஊழியர்களுக்கு விடுமுறை..!!

RUPA

Next Post

ஓய்வு காலத்தில் உங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் வேண்டுமா..? அப்படினா இந்த மாதிரி பிளான் பண்ணுங்க..!!

Fri Oct 10 , 2025
மாறிவரும் வாழ்க்கை முறைச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்கள் காரணமாக, 30-களின் தொடக்கத்திலேயே ஓய்வுக் காலம் குறித்துத் திட்டமிட வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓய்வுக் காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாகக் கழிக்க வேண்டுமென்றால், இப்போதிருந்தே சரியான திட்டமிடலுடன் சேமிப்பைத் தொடங்குவது கட்டாயம். பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமற்ற கனவு அல்ல. சரியான திட்டமிடல், சுய ஒழுக்கம் மற்றும் தேவையற்ற […]
Pension 2025

You May Like