உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவீந்தர் குமார் (35). இவர், கடந்த 2008ஆம் ஆண்டு வேலைக்காக டெல்லிக்கு வந்துள்ளார். அங்கு போதைப் பொருட்கள் மற்றும் ஆபாசக் கொடுமைகளை அனுபவிக்கத் தொடங்கினார். அதே ஆண்டில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். ஆனால், அப்போது அவர் கைது செய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு 3 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன நிலையில், சில மணி நேரத்தில் அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. தொடர் விசாரணையை அடுத்து, ரவீந்திரர் கைது செய்யப்பட்டார். பின்னர், போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், இது சாதாரண கொலை அல்ல என்பதை போலீசார் உணர்ந்தனர்.
அந்த வாக்குமூலத்தில், “நான் இதுவரை சுமார் 30 சிறுமிகளை கடத்தியும், பாலியல் வன்முறை செய்தும் கொலை செய்துள்ளேன். பல சமயங்களில் இறந்த உடல்களையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினேன். அது எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாலையும் போதையில் தனது வீட்டை விட்டு வெளியேறும் அவர், 6 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பணம் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி, ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.
ரவீந்திரர் 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போதும், போதுமான ஆதாரங்கள் இல்லாததால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், 2015ஆம் ஆண்டு 6 வயது சிறுமி ஒருவரை கடத்தியும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும், கொன்ற வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள், உதட்டில் கண்ட தடங்கள் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட மரணம் ஆகிய காரணங்களால் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது மீது தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
Read More : ரெடிமேட் ஆடை உற்பத்தி ஆலை..!! ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?