திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்தில் போட்டி..!

stalin eswaran

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது.. 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.. அதாவது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் திமுக கூட்டணியின் இடம்பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. உதயசூரியன் சின்னத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தானது.. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் – கொமதேக கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொமதேக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : Breaking : அஇபுதமமுக – புதிய கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா..! தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிப்பு..!

RUPA

Next Post

ஆபத்து வளையத்தில் UPI பயனர்கள்… புதிய 'டூல்கிட்'… சில நொடிகளிலேயே வங்கிக் கணக்கு காலியாகும்..!

Fri Mar 13 , 2026
இன்றைய காலக்கட்டதில் ஆன்லைன் பணம் செலுத்துதல் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடிகள் நடக்கின்றன. நீங்கள் கவனக்குறைவாக இருந்தாலும், உங்கள் கணக்கு காலியாக இருப்பது உறுதி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்ய புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். வழக்கமாக, மொபைலில் உள்ள சிம்மை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கணக்கு இணைக்கப்பட்ட பின்னரே UPI பணம் செலுத்துகிறது. ஆனால் இந்த புதிய வகை […]
upi fraud 1 1

You May Like