கோலி, டு பிளெசிஸ் அதிரடி ஆட்டம்!… 8விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி!…

ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது.


16-வது ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்களூருஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆட்டமிழக்க, கேப்டன் மார்க்ரேம் மற்றும் கிளாஸன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய கிளாஸன் 49 பந்துகளில் சதம் அடிக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 187 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி, டு பிளெசிஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் கடந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதமடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் டு பிளெசிஸ், நடராஜன் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் மற்றும் பிரேஸ்வெல் இணைந்து வெற்றி இலக்கை எட்டச்செய்தனர். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 100 ரன்களும், டு பிளெசிஸ் 71 ரன்களும் குவித்தனர்.

KOKILA

Next Post

2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை!... அதிகாரப்பூர்வ லோகோ வெளியீடு!

Fri May 19 , 2023
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ லோகோவை ஃபிஃபா.வெளியிட்டது. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2026 ஆம் ஆண்டுக்கான லோகோவை, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இன்று வெளியிட்டார். ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று நாடுகள் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறை. அதாவது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ஃபிஃபா 2026 உலகக்கோப்பை தொடரை நடத்துகின்றன. இது கால்பந்து ரசிகர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான […]
FIFA logo2026

You May Like