கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொட்டன்குளக்கரா பகவதி அம்மன் கோவில், அதீத சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களிடையே நம்பிக்கையுடன் வழிபடப்படும் புண்ணியஸ்தலமாக விளங்குகிறது.
கொட்டன்குளக்கரா தேவி என அழைக்கப்படும் அம்மன், பண்டைய காலத்தில் நிகழ்ந்த அதிசய நிகழ்வின் நினைவாக இங்கு வழிபடப்படுகிறது. ஒருமுறை மாடுகள் மேய்த்த சிறுவர்கள் ஒரு தேங்காயை அருகிலுள்ள கல்லில் உடைத்தபோது, அதிலிருந்து ரத்தம் வெளியேறியது. இது தெய்வீக சக்தி படைத்த இடம் என உணரப்பட்டதையடுத்து, அந்த இடத்தில் சிறிய கோவில் போன்று அமைத்துப் பெண்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அந்த வழிபாடுகளில் சிறுவர்களும் பங்கேற்றனர்.
தேங்காய் துருவல் (கொட்டன்) மற்றும் தேங்காய் எண்ணெய்யால் செய்யப்பட்ட படைப்புகளைக் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் மரபும், கோவிலின் பெயருக்கும் பின்புலமாக உள்ளது. இதன் காரணமாகவே இக்கோவிலுக்கு “கொட்டன்குளக்கரா” என்ற பெயர் வந்தது.
மார்ச் மாதம் நடைபெறும் வருடாந்திர திருவிழா, கோவிலின் முக்கியமான விழா நிகழ்வாகும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். வாழ்க்கை சிக்கல்களுக்குத் தீர்வு, தொழில் வளர்ச்சி, செல்வ வளம், குழந்தைப்பேறு உள்ளிட்ட நல்வாழ்வுக்கான வேண்டுதல்களுடன் பக்தர்கள் இங்கு அருளைப் பெற வருகின்றனர்.
இக்கோவிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் பக்தர்கள் வேண்டியதை அருள் கண் கண்ட தெய்வமாக விளங்குகிறாள். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து, அவர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தும் தெய்வமாக இவள் விளங்குகிறார். செல்வ வளம் பெருக, தொழில் சிறக்க, குழந்தை பேறு கிடைக்க போன்ற வேண்டுதல்களுக்காகவே இக்கோவிலில் அதிகமானவர்கள் வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.
Read more: பொதுத்துறை வங்கியில் 1500 பணியிடங்கள்.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!