தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், எதிர்பாராத திருப்பமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலேயே 1 கோடியே 31 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையுடன், கோடைகால சிறப்பு போனஸாக ரூ.2,000 சேர்த்து இந்த மொத்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது
முன்கூட்டியே வழங்கப்பட்டதன் பின்னணி :
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகையை வழங்குவதில் எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளதாக அரசு கணித்துள்ளது. இந்த சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும், தேர்தல் நேரத்தில் பயனாளர்களுக்கு எவ்விதத் தடையும் இன்றி பணம் சென்றடையவும் ‘அட்வான்ஸ்’ முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என்றும் புதிய வாக்குறுதியை அளித்துள்ளார்.
பணம் வரவில்லையா..?
இந்த மெகா வரவு குறித்து பலருக்கு செல்போனில் குறுஞ்செய்தி (SMS) வந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் சிலருக்கு மெசேஜ் வராமல் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பயனாளிகள் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை முறையாக உரிமைத் தொகை பெற்று வந்தும், தற்போது இந்த ரூ.5,000 கிடைக்கப் பெறாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் அல்லது ‘முதல்வரின் முகவரி’ செயலி மற்றும் cmhelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
Read More : வீட்டில் இருக்கும் 4 பொருட்கள் போதும்..!! கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை ஈசியா சுத்தம் பண்ணலாம்..!!



