பெண்களே..!! உங்கள் எலும்புகள் மிக மோசமாக பாதிக்கும்..!! கட்டாயம் இதை தவிர்த்திடுங்கள்..!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Car 2025

வாகனப்புகையால், வயது முதிா்ந்த பெண்களுக்கு விரைவில் எலும்பு தேய்மானம் அடையும் என நியூயார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


அமொிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வில் வாகனப்புகையில் இருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு, மற்ற வயது பெண்களை விட, மாதவிடாய் நின்ற வயது முதிா்ந்த பெண்களின் கீழ் முதுகுத் தண்டை இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனா். தரமில்லாத காற்று அல்லது நச்சு நிறைந்த காற்று, எலும்புகளை மிக மோசமாகப் பாதிக்கிறது என்றும், எலும்புகள் அதிகம் தேய்வதற்கு முக்கிய காரணமாக நைட்ரஜன் ஆக்ஸைடு இருக்கிறது என்பதை தாங்கள் முதன் முதலாக கண்டறிந்திருப்பதாகவும், அதிலும் குறிப்பாக அது முதுகெலும்பை அதிகம் பாதிக்கிறது என்றும் கொலம்பியா மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற அமைப்பின் என்வைரென்மென்டல் ஹெல்த் சைன்சஸ் துறையின் இணை ஆராய்ச்சி விஞ்ஞானியான டிடியா் ப்ரடா கூறியுள்ளார்.

அதாவது, தனிப்பட்ட முறையில் காற்றை மாசுபடுத்தும் காரணிகளை ஆய்வு செய்ததில், அந்த காரணிகள் முதியவா்களின் எலும்புகளின் தாது அடா்த்தியைப் பாதித்து, எலும்புப்புரை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தொிவித்திருக்கின்றன. இகிளினிக்கல் மெடிசின் என்ற பத்திாிக்கையில் வந்திருக்கும் இந்த புதிய ஆய்வானது, வயதான பெண்மணிகளின் எலும்புகளுக்கும், காற்றில் இருக்கும் நச்சுத் தன்மைக்கும் இடையேயான தொடா்பை முதன் முதலாக ஆய்வு செய்து, காற்று மாசுபாடு அவா்களுடைய எலும்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக, மாதவிடாய் நின்ற வயது முதிா்ந்த பெண்களைத் தோ்ந்தெடுத்தனா். அவா்கள் மதிப்பீடு செய்த காற்றின் நச்சு அளவில் (PM10, NO, NO2, மற்றும் SO2) இந்தப் பெண்களை இருக்குமாறு செய்து, அந்த பெண்களின் எலும்புகளின் (BMD, முழு உடல், இடுப்பு, கழுத்து மற்றும் முதுகெலும்பு) தாது அடா்த்தியை முதல் ஆண்டு, இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறாவது ஆண்டு என்று தொடா்ந்து மதிப்பிட்டனா். ஆறு ஆண்டு கால ஆய்வின் முடிவில், காற்றில் இருந்த நைட்ரஜன் ஆக்ஸைடானது, இந்த பெண்களின் முதுகெலும்பின் தாது அடா்த்தியை ஒவ்வொரு ஆண்டும் 1.22 சதவீதம் அளவிற்கு குறைத்து வந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். இது மற்ற காரணிகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை விட இரண்டு மடங்காகும் என்றும் கூறப்படுகிறது.

Read More : “2026 தேர்தல் திமுக தான் டாப்”..!! “அதிமுக, தவெக எல்லாம் டம்மி”..!! இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு..!!

English Summary

A shocking study conducted in New York has revealed that elderly women are more likely to experience bone loss due to vehicle exhaust fumes.

CHELLA

Next Post

கோடையில் எலக்ட்ரிக் கார் சீக்கிரம் ஜார்ஜ் குறைந்துவிடுகிறதா?. அப்போ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!.

Wed May 28 , 2025
Does an electric car run out of battery quickly in the summer? Then follow these tips!
electric car

You May Like