தமிழ்நாடு பெண்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டம் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 250 பெண்களுக்கு தொழில் வாய்ப்பு உருவாக்கப்பட்டதுடன், சுயதொழிலில் முனைந்து செயல்பட விரும்பும் பெண்களுக்கு இது ஒரு நல்ல தளமாக அமைந்துள்ளது. மேலும், இந்த இளஞ்சிவப்பு CNG ஆட்டோக்களில் GPS வசதி வழங்கப்பட்டிருப்பதுடன், அவசர சூழ்நிலைகளில் போலீசாருடன் நேரடி தொடர்பு ஏற்படும் வகையில் பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மகளிர் தினமான கடந்த மார்ச் 8ஆம் தேதி, முதல்கட்டமாக தேர்வான பயனாளிகளுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்டோ வழங்கினார். தற்போது, மூன்றாம் கட்டமாக மேலும் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. எனவே, இதனை தகுதியான பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More : பெண்களே..!! நீங்களும் இனி முதலாளி ஆகலாம்..!! தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!