இந்தோனேசியாவின் வெவோடோபி நகரில் அமைந்துள்ளது லிவோட்பி எரிமலை. இது லக்கி லக்கி எனவும் அழைக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்திற்குள் பலமுறை வெடித்து சிதறியதால், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1,500 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். சமீபத்தில் நடந்த வெடிப்பில், சுமார் 20 கிலோமீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு மற்றும் சாம்பல் வானில் பறந்தது.
இதனால் வெவோடோபி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பலால் மூடிய நிலையைக் கொண்டிருந்தன. தொடர்ந்த சில மணி நேரங்களுக்குள், மீண்டும் மீண்டும் வெடிப்புகள் பதிவானதால், அருகிலுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விமானப் போக்குவரத்துக்கு தடைகள்: தீக்குழம்பு மேகங்கள் வானில் பரவியதால், அந்த பகுதியில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. விமானங்கள் இயங்க முடியாததால், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டனர்.
மக்கள் வெளியேற்றம்: எரிமலை வெடித்ததில் சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக பாய்ந்தது. இதனால், லிவோட்பி எரிமலையை சுற்றியுள்ள பல கிராமங்கள் ஆபத்துக்குள்ளாகின. அரசு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு, அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தினர்.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்: லிவோட்பி எரிமலை தனது இயற்கை அழகுக்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
ஆனால், எரிமலை வெடிப்பை தொடர்ந்து, அங்கு இருந்த சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதனால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலை எச்சரிக்கை நிலை தொடரும்: இந்தோனேசியாவில் 130-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இவற்றில் பல, செயல்படும் நிலையில் இருக்கின்றன. பசிபிக் நெருப்பு வளையத்தில் இருப்பதால், இந்த நாட்டில் மண் அதிர்வு மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகமாக நடக்கின்றன. லிவோட்பி எரிமலைவின் தற்போதைய நிலைமை உயர் எச்சரிக்கை நிலையாக உள்ளது. மக்கள் அனைவரும் அரசு வழங்கும் தகவல்களை பின்பற்றி, அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Read more: சிக்கன் முட்டை விலை கிடுகிடு சரிவு.. அசைவ பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!