நில ஊழல் வழக்கு!. சட்டவிரோதமாக ரூ.58 கோடி வருமானம்!. ராபர்ட் வதேரா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமலாக்கத்துறை!.

Robert Vadra land deal ED 11zon

குருகிராமில் நடந்த நில விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில், தொழிலதிபரும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாத்ரா, சட்டவிரோத முறையில் ரூ.58 கோடி வருமானம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.


இந்த நிதிகளை ராபர்ட் வாத்ரா சட்டவிரோதமாக பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, இந்த நிதியை வதேரா அசையா சொத்துக்களை வாங்கவும், முதலீடுகளை செய்யவும், கடன்கள் மற்றும் முன்பணங்களை வழங்கவும், அவருடன் தொடர்புடைய குழு நிறுவனங்களின் பாக்கிகளைத் தீர்க்க பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை கூறியது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான வதேரா, தனது நிறுவனமான ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் (SLHPL) சம்பந்தப்பட்ட நில ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவிடமிருந்து சலுகைகளைப் பெற தனது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குருகிராமில் உள்ள ஷிகோபூரில் 3.53 ஏக்கர் நிலத்திற்கான வணிக காலனி உரிமம் SLHPL நிறுவனத்திற்கு ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும், குருகிராம் காவல்துறையின் FIR-ஐ மேற்கோள் காட்டி, அந்த நிலம் ஓங்காரேஷ்வர் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் (OPPL) நிறுவனத்தால் SLHPL நிறுவனத்திற்கு எந்த பண பரிவர்த்தனையும் இல்லாமல் மாற்றப்பட்டது என்று அமலாக்கத்துறை கூறுகிறது.

இந்த நில மாற்றம் உண்மையில் ஒரு லஞ்சமாக இருந்தது, அதற்கு பதிலாக வாத்ரா தனது “தனிப்பட்ட செல்வாக்கினை” பயன்படுத்தி OPPL நிறுவனத்துக்கு குடியிருப்பு அனுமதி பெற உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. தேவையான அணுகு சாலை மற்றும் நியமிக்கப்பட்ட வணிகப் பகுதி உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத போதிலும், சில நாட்களுக்குள் உரிமம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை இதை கடுமையான அரசியல் அழுத்தத்தினால் நிகழ்ந்தவை எனக் குற்றம்சாட்டுகிறது.

SLHPL மற்றும் DLF ரீடெய்ல் டெவலப்பர்ஸ் லிமிடெட் இடையேயான 2008 ஒப்பந்தத்திலும் அமலாக்கத்துறையின் விசாரணை கவனம் செலுத்துகிறது, இதன் மூலம் 2008 மற்றும் 2012 க்கு இடையில் வத்ராவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.58 கோடி செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த பணப்பரிவர்த்தனைகளில், ஜூன் 2008 இல் ப்ளூ பிரீஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி, 2009 இல் எஸ்.எல்.எச்.பி.எல் நிறுவனத்திற்கு ரூ.10 கோடி மற்றும் ரூ.35 கோடி மற்றும் 2012 இல் அதே நிறுவனத்திற்கு ரூ.8 கோடி ஆகியவை அடங்கும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதிகள் சட்டவிரோதமாக உரிமம் வழங்குவதில் தொடர்புடைய “குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம்” என்று அமலாக்கத் துறை கூறுகிறது. ஸ்கை லைட் ரியாலிட்டி, ரியல் எர்த் எஸ்டேட்ஸ், ப்ளூ ப்ரீஸ் டிரேடிங், லம்போதர் ஆர்ட்ஸ், வட இந்திய ஐடி பார்க்ஸ் மற்றும் அவரது உரிமையாளர் நிறுவனமான மெசேஜ் ஆர்டெக்ஸ் உள்ளிட்ட பல வதேராவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அமலாக்கத்துறை வட்டாரங்களின்படி, இந்தப் பணம் DLF மாக்னோலியாஸில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், பெஸ்டெக் பிசினஸ் டவர்ஸில் உள்ள வணிக இடங்கள், ராஜஸ்தானில் விவசாய நிலங்கள் மற்றும் பிற சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பல சொத்துக்கள் பின்னர் விற்கப்பட்டு, நிதி ஆதாரத்தை மறைக்க பல்வேறு குழு நிறுவனங்கள் மூலம் வருமானம் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, ரூ.43.07 கோடி பல நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டது, DLF இலிருந்து பெறப்பட்ட ரூ.58 கோடி முழுவதும் சட்டவிரோத ஆதாயங்களாகக் கருதப்படுகிறது. ரூ.44.58 லட்ச முத்திரை வரி ஏய்ப்பு மற்றும் கட்டாய இலாபப் பகிர்வு நிலுவைத் தொகையை செலுத்தாதது குறித்தும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

அமலாக்கத் துறையிடம் அளித்த வாக்குமூலங்களில், பெரும்பாலான பரிவர்த்தனைகளில் தனக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று வதேரா மறுத்துள்ளார். தற்போது இறந்துவிட்ட மூன்று கூட்டாளிகளால் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் நிராகரித்துள்ளார்.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த சமீபத்திய குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, ஜூலை 18 அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு வதேராவுக்கு எதிராக ஒரு தசாப்த கால தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். எனது தங்கை கணவரை கடந்த பத்து வருடங்களாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. இந்த சமீபத்திய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும். ராபர்ட், பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகள் மீண்டும் ஒரு தீங்கிழைக்கும், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அவதூறு மற்றும் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், நான் அவர்களுடன் நிற்கிறேன்” என்று ராகுல் காந்தி Xபதிவில் கூறியிருந்தார்.

மேலும், “அவர்கள் அனைவரும் எந்த வகையான துன்புறுத்தலையும் தாங்கும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன், அவர்கள் தொடர்ந்து கண்ணியத்துடன் அதைச் செய்வார்கள். இறுதியில் உண்மை வெல்லும்,” என்றும் ராகுல்காந்தி கூறினார். 56 வயதான தொழிலதிபரை குற்றவியல் வழக்குப் புகாரில் எந்தவொரு புலனாய்வு நிறுவனமும் சேர்த்திருப்பது இதுவே முதல் முறை.

கடந்த மாத தொடக்கத்தில், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் முழுவதும் ரூ.37 கோடிக்கு மேல் மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக PTI அறிக்கை தெரிவித்தது. இந்த சொத்துக்கள் வத்ரா மற்றும் அவரது நிறுவனங்களான ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

Readmore: தினசரி அசைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்..? இதயநோய், கல்லீரலுக்கு பெரும் ஆபத்து..!!

KOKILA

Next Post

உடல் எடை குறைப்பில் கீர்த்தி சுரேஷ் செய்த மிகப்பெரிய தவறு..!! பக்கவிளைவுகளால் அவதி..!! மருத்துவ நிபுணர்கள் வார்னிங்..!!

Mon Aug 11 , 2025
சினிமாவில் அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது உடல் எடைக் குறைப்பு பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வித டயட் மற்றும் மருந்துகள் இல்லாமல், கடுமையான கார்டியோ பயிற்சிகளின் மூலம் சுமார் 9 கிலோ எடையை குறைத்துள்ளார். ஆனால், இது வேகமாக எடைக் குறைய உதவியிருந்தாலும், அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். உடல் நலம் […]
Keerthy Suresh 2025

You May Like