ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையால் அழிக்கப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் இடிப்பு பணிகள் நிறைவடைந்தது; பாகிஸ்தான் அரசின் நிதியுதவியுடன் மறுகட்டமைப்பு தொடங்கியது என இந்திய பாதுகாப்புத் துறையின் மதிப்பீடுகளை அறிந்த நபர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை லஷ்கர் அமைப்பின் முரிட்கே பகுதியில் உள்ள “மர்கஸ் தைபா” வளாகத்தை தாக்கியது. 1.09 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த வளாகத்தில் பயிற்சி மையங்கள், ஆயுத சேமிப்பு மற்றும் தலைமை தளபதிகளின் குடியிருப்புகள் இருந்தன.
சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி ஆகஸ்ட் 18ஆம் தேதி ஐந்து அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் உதவியுடன் தொடங்கியது; செப்டம்பர் 7ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக இந்திய பாதுகாப்புத் துறையின் மதிப்பீடுகளை அறிந்த நபர் தெரிவித்தார். முழு வளாகமும் சிதிலமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மறுகட்டமைப்பு பணிகளை லஷ்கர் உயர்மட்ட தலைவர்கள், வளாக இயக்குநர் மௌலானா அபூ ஜர் மற்றும் தளபதி யூனுஸ் ஷா புகாரி நேரடியாக மேற்பார்வை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழு, பிப்ரவரி 5, 2026 ஆம் தேதி பாரம்பரியமாக நடைபெறும் காஷ்மீர் சார்ந்த ஜிஹாத் மாநாட்டை பாரம்பரியமாக அந்த இடத்தில் நடத்துவதற்கு முன்பு, குறைந்தபட்சம் பகுதியளவு புனரமைப்புப் பணிகளை முடிக்க குழு இலக்கு வைத்துள்ளது.
மதிப்பீட்டின் படி, மே மாத மோதலுக்குப் பின் பாகிஸ்தான் அரசு சேதமடைந்த பயங்கரவாத முகாம்களை மறுகட்டமைக்க நிதியுதவி வழங்குவதாக வெளிப்படையாக உறுதியளித்தது. அதன்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி இஸ்லாமாபாத் லஷ்கருக்கு ஆரம்ப நிதியாக 40 கோடி பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 12.5 கோடி இந்திய ரூபாய்) வழங்கியுள்ளது.
“அவர்கள் ஆஃப்லைன் நிதி திரட்டும் முகாம்களையும், ஆன்லைன் நிதி கோரிக்கைகளையும் நடத்தி வருகின்றனர்; அப்போது உறுப்பினர்கள் தங்களை நிவாரணப்பணியாளர்களாகக் காட்டிக்கொள்கின்றனர்” என்று அந்த நபர் கூறினார். “திரட்டப்படும் இந்த நிதி, தலைமையகம் மற்றும் பிற சேதமடைந்த முகாம்களை மறுகட்டமைப்பதற்கே மாற்றப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.
இந்த மூலோபாயம், முன்பும் பயன்படுத்தப்பட்ட நடைமுறையைப் பிரதிபலிக்கிறது. 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பின், லஷ்கர் மனிதநேய நிவாரணம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடிகள் திரட்டியது. ஆனால், அந்த நிதியின் சுமார் 80 சதவீதம் பயங்கரவாத கட்டமைப்புகளை உருவாக்குவதற்கே மாற்றப்பட்டதாக மதிப்பீடு தெரிவிக்கிறது.
தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு, லஷ்கர் தனது செயல்பாடுகளை இடமாற்றியது. ஆரம்பத்தில், பயிற்சி மற்றும் தங்குமிட வசதிகள் பஹாவல்பூரிலுள்ள மர்காஸ் அக்ஸாவிற்கும், பின்னர் ஜூலை மாதத்திற்குள் கசூர் மாவட்டத்தின் படோகியில் உள்ள மர்காஸ் யர்மூக்கிற்கும் மாற்றப்பட்டது.
Readmore: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திமுக சாதனை…! இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டு…!