சென்னை அருகே நொறுங்கிய IAF விமானத்தின் கடைசி நிமிட வீடியோ!

chennai iaf 1

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் அருகே இந்திய விமானப் படை பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.. இந்த பயிற்சி விமானத்தில் விமானி சுபன் பாராஷூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த விமானம் காலை முதலே அப்பகுதியில் பயிற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இன்று மதியம் திருப்போரூர் உப்பளம் அருகே சகதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது.. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..


விமானத்தில் இருந்த விமானி, விமானம் செயலிழந்துவிட்டது என்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகே அவர் பாராசூட் மூலம் கீழே குதித்துள்ளார்.. இதையடுத்து தாம்பரம் விமானப் படையில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. விமானம் விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே விழுந்து நொறுங்கிய விமானத்தின் கடைசி நிமிட வீடியோ வெளியாகி உள்ளது.. இந்திய விமானப்படை விமானம் உப்பளம் பகுதியில் விபத்துக்கு முன் வானில் சுற்றியதை மீனவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது..

முன்னதாக நேற்று புதுக்கோட்டை சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்டது.. இந்த நிலையில் இன்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Read More : Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் 2 முறை தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

RUPA

Next Post

“ஆப்ரேஷன் பண்ணிட்டு வா”..!! காதலனுக்காக திருநங்கை செய்த காரியம்..!! ஆசை தீர அனுபவித்துவிட்டு கடைசியில் டிமிக்கி கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..!!

Fri Nov 14 , 2025
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 23 வயது இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, “அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் மட்டுமே […]
Sex 2025 1

You May Like