பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அவரது 2-வது மனைவியும், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா அளித்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜாய் கிரிஸில்டா தனது நேர்காணலில், ”கடந்த 2023 டிசம்பரில் மாதம்பட்டி ரங்கராஜைத் திருமணம் செய்ததாகவும், இந்த திருமணம் குறித்து ரங்கராஜின் பெற்றோருக்கும், அவரது தம்பிக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். ரங்கராஜ் தனது முதல் மனைவியைப் பிரிந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து பெறப் போவதாகவும் என்னிடம் கூறினார். தனிமையில் இருந்த தனக்குத் துணையாகவும், அன்பாக உணவு பரிமாறவும் ஒருவர் தேவைப்பட்டதால் என்னைத் திருமணம் செய்துகொண்டதாக ஜாய் தெரிவித்தார்.
மேலும், திருமணத்திற்குப் பிறகே ரங்கராஜுடன் உடல் உறவுக்குச் சம்மதித்ததாகவும், 2024-இல் கர்ப்பமானபோது கரு கலைந்துவிட்டதாகவும், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் தெரிவித்துள்ளார். இந்தக் குழந்தையை எதிர்பார்த்து, ரங்கராஜ் ஒரு பெண் குழந்தை வேண்டுமென ஆசைப்பட்டதாகவும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
ஆனால், மூன்று மாத கர்ப்பத்திற்குப் பிறகு ரங்கராஜின் மனநிலை மாறியதாகவும், தன்னை மிரட்டி கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் ஜாய் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர், கருக்கலைப்பு உயிருக்கு ஆபத்து என்று கூறியதால், அந்த முயற்சி நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்திற்காக நான் இப்படிச் செய்கிறேன் என்று சிலர் விமர்சிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. நான் கண்ணியமானவள். பணத்திற்காக ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன். எனக்கு பணம் தேவையில்லை. என் குழந்தைக்குத் தந்தை வேண்டும், அவனது இனிஷியல் வேண்டும்” என்று ஆவேசமாக ஜாய் பேசியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜுடனான கடைசி இரவு குறித்து உருக்கமாக பேசிய ஜாய், “அவர் ஷூட்டிங்கில் இருந்து எவ்வளவு தாமதமாக வந்தாலும், நான் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரை வரவேற்பேன். அதுதான் என் காதல். ஆனால், ஒரு நாள் ஷூட்டிங் என்று சொல்லிப் போனவர் திரும்பவே இல்லை. காலையில் பார்த்தபோது வீடே வெறிச்சோடி இருந்தது. அதன் பிறகு, அவர் என் நம்பரை பிளாக் செய்துவிட்டார்” என்று கண்ணீருடன் கூறினார்.