கடைசி டி20 போட்டி..!! கடைசி நேரத்தில் திடீரென விலகிய கேப்டன்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகினார்.


நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

கடைசி டி20 போட்டி..!! கடைசி நேரத்தில் திடீரென விலகிய கேப்டன்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

இந்நிலையில். இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது முழங்கை வலி பிரச்சனைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

பாகுபலி to பரதேசிபுலி வரை இங்க வந்திருக்கு "மரியாதையா “வாரிசு” படத்தை ஓட்டுங்க" - கஞ்சா கருப்பு ஆவேசம்!!!

Mon Nov 21 , 2022
ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் […]
vijay kanjaa

You May Like