மறைந்த நடிகர் மனோபாலாவின் கடைசி பதிவு..!! சமூக வலைதளங்களில் வைரல்..!! ரசிகர்கள் ஷாக்..!!

நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதள பக்கத்தில் அவர் கடைசியாக பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.


மனோபாலா காமெடி நடிகராகவும் குண சித்திர வேடத்திலும், சின்னத்திரையும், வெள்ளித்திரைகளிலும் நடிகராகவும் ஒரு இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் திரை உலகில் ஆரம்பமானது என்னவோ இயக்குனராகத்தான். அதற்கு பிறகு தான் நடிகராக மாறி இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய 69-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்திருக்கிறார். அவருடைய இறப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருடைய இறப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் முதல் வடிவேலு, கருணாஸ் என பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

screenshot6443 1683105722

இந்நிலையில் கடைசியாக நடிகர் மனோபாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மனோபாலாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 58 கே பாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். கடைசியாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 16ஆம் தேதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு அதிகமானோர் தற்போது இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.

CHELLA

Next Post

தாய் வெளியே சென்ற நேரத்தில் மகள் மீது பாய்ந்த தந்தை..!! கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Wed May 3 , 2023
நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் தாயும், மகளும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் தாய், அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் நியாசுதீன் (41) […]
rape attampt

You May Like