மீண்டும் Layoff-ஐ தொடங்கியது அமேசான்..! 16,000 பேர் பணிநீக்கம்..! இந்திய ஆபிஸ்களில் பெரும் பாதிப்பு..!

amazonlayoffs 1 1

அமேசான் நிறுவனம் இன்று முதல் 16,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிநீக்க கட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெடிட் உள்ளிட்ட பல ஆன்லைன் தளங்களில் வெளியாகும் தகவல்களின் படி, இந்த பணிநீக்கங்களின் பெரும் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும் என்றும், முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் அமேசானில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பலர் இந்த புதிய பணிநீக்க அலை காரணமாக கடும் பதற்றத்தில் உள்ளனர்.


இந்த நடவடிக்கை, 2026 நடுப்பகுதிக்குள் 30,000-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் பணியிடங்களை குறைக்கும் அமேசானின் விரிவான மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் ஏற்கனவே 2025 அக்டோபரில் 14,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவில் பாதிக்கப்படக்கூடிய அலுவலகங்கள்

ரெடிட் போன்ற ஊழியர் விவாத மேடைகள் அமேசானின் பெரும் பணிநீக்கத் திட்டம் குறித்து கருத்துகளால் நிரம்பியுள்ளன. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்கள் அதிக அளவில் வேலை இழப்பை சந்திக்கக்கூடும் என்று கூறப்படுகிறது..

அமேசானின் முக்கிய செயல்பாட்டு மையமாக இருக்கும் சென்னை நகரில், இந்த பணிநீக்கங்கள் உள்ளூர் குடும்பங்களுக்கும் பொருளாதாரத்துக்கும் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்ப மையங்களாக அறியப்படும் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இடங்களாக ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த முறை இந்தியாவில் நடந்த பணிநீக்கங்களில் சென்னை உட்பட 800 முதல் 1,000 பேர் வரை வேலை இழந்தனர்.

எந்த பிரிவுகள் அதிகம் பாதிக்கப்படும்?

இந்தியாவில் வலுவான அணிகளை கொண்ட பல பிரிவுகள் இந்த பணிநீக்கங்களில் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) – கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் பெரிய அளவிலான குறைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பிரைம் வீடியோ மற்றும் பிற மீடியா பிரிவுகள் – சமீப காலங்களில் இந்தியாவில் விரிவடைந்துள்ளதால், இங்கு பணியிடங்கள் நீக்கப்படலாம்.

ரீட்டெயில் மற்றும் ஈ-காமர்ஸ் பிரிவுகள்

அமேசான் பே (Amazon Pay)

அலெக்ஸா போன்ற சாதனங்களை கையாளும் டிவைஸஸ் அணிகள்

மனிதவள மற்றும் ஆதரவு பிரிவுகள் (People Experience and Technology – PXT)

இந்த அனைத்துப் பிரிவுகளும் இந்தியாவில் பணிநீக்கத்தின் தாக்கத்தை சந்திக்கக்கூடியதாக கூறப்படுகிறது.

பணிநீக்கங்களுக்கான காரணம் என்ன?

வேகமான வளர்ச்சியின் போது உருவான அதிகமான நிர்வாக அடுக்குகள் (bureaucracy) முடிவெடுப்பையும் புதுமையையும் தடை செய்துள்ளதாக அமேசான் நிறுவனம் கருதுகிறது.. அதைக் குறைக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனிதவள நிர்வாகம், மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் ஆதரவு போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செயல்முறைகளை தானியங்கி மயமாக்கி, செலவுகளை குறைத்து திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அமேசான் லாபகரமாக இயங்கி வந்தாலும், இந்த பணிநீக்கங்கள் பொருளாதார நெருக்கடியால் அல்ல, நிறுவனத்தின் நீண்டகால லாபத்தை அதிகரிக்கும் மூலோபாய நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கங்கள் எப்போது தொடங்கும்?

இந்த பணிநீக்கங்கள் ஜனவரி 27 தொடங்கும் வாரத்திலேயே ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. ரெடிட் தளத்தில் சில ஊழியர்கள், ஜனவரி 28 முதல் பணிநீக்க மின்னஞ்சல்கள் அனுப்பப்படலாம் என்று கூறியுள்ளனர். Blind மற்றும் Reddit போன்ற தளங்களில் உள்ள பலரும், இந்த வாரத்திலேயே பணிநீக்க அறிவிப்புகள் வரும் என்பது உறுதி என்று தெரிவிக்கின்றனர்.

IT தொழிலாளர் சங்கத்தின் கடும் கண்டனம்

இந்திய IT மற்றும் ITES ஊழியர் சங்கமான UNITE, அமேசானின் இந்த முடிவை கடுமையாக கண்டித்துள்ளது. இந்த பணிநீக்கங்கள் சட்டவிரோதமானவை என்றும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டமிட்ட தாக்குதல் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.

UNITE வெளியிட்ட அறிக்கையில், “இந்த சட்டவிரோத பணிநீக்கம், நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடி அல்லது வணிக இழப்பின் விளைவு அல்ல. இது உழைக்கும் மக்கள்மீது திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை. ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் இதனால் சிதைக்கப்படுகிறது. அமேசான் தற்போது இந்தியாவில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்களை வேலைக்கு வைத்துள்ளது. சென்னை, அமேசானின் முக்கிய கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப மையமாக உள்ளது. ஆகவே, இந்த பணிநீக்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உடனடி மற்றும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

Read More : PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்..! வட்டி மட்டுமே ரூ.40,000 கிடைக்கும்!

RUPA

Next Post

மலைப்பகுதியில் மேகி விற்கும் நபரின் ஒரு நாள் வருமானம் இவ்வளவா? “பேசாம வேலையை விட்ரலாம் போல..” நெட்டிசன்கள் திகைப்பு..!

Tue Jan 27 , 2026
மலைப்பகுதிகளில் ஒரு சூடான மேகி (Maggi) சாப்பிடுவது தனி சுகம் தான்.. உண்மையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிராண்டான மேகி, மலைப் பிரதேசங்களில் (சிறிய சாலையோர கடைகள்) கிட்டத்தட்ட இணைந்த ஒன்றாகவே மாறிவிட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு மேகியை விற்பனை செய்யாத கடையை காண்பது அரிது. ஆனால் மலைப்பகுதிகளில் மேகி விற்றால் உண்மையில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? இதை சோதித்து பார்த்தார் ஒரு கண்டெண்ட் கிரியேட்டர். மலைப்பகுதிகளில் மேகி […]
man sells maggi

You May Like