சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பிரபலமாவதற்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரம் முக்கிய காரணம்.. நடிகர் மாரிமுத்து மறைந்த பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த கேரக்டர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ‘எதிர்நீச்சல் 2’ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து பெண்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள் எனக் கொண்டுசெல்லப்படும் இந்த கதையில் 4 மருமகள்கள் அட்டகாசமாக நடித்து வருகிறார்கள். தற்போதைய கதைக்களத்தை பொறுத்தவரை தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜீவானந்தம் மற்றும் ஜனனியும் போராடி வருகிறார்கள்.
ஜீவானந்தம் மற்றும் பார்கவி இறந்ததாக ஆதி குணசேகரன் நினைத்த நிலையில், இருவரும் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தன்னிடம் உள்ள அடியாட்களை அனுப்பி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் ஜீவானந்தம் உயிருடன் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது, இந்த விஷயம் வெளியே தெரியாமலேயே முடித்துவிட வேண்டும் என கூறுகிறார் குணசேகரன்.
மறுபுறம் ஈஷ்வரி குணசேகரனால் தாக்கபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஈஸ்வரியின் இந்த நிலைக்கு ஜீவானந்தம் தான் காரணம் என புதிய சர்ச்சையை குணசேகரன் கிளப்பிவிட்டு திருமண வேலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் குணசேகரன் ஈஸ்வரியை கொல்ல முயன்ற வீடியோ ஆதாரம் வேரு ஒரு நபரின் கையில் மாட்டியுள்ளது. இந்த சிக்கல்களுக்கு இடையே தர்ஷனுக்கு பார்கவியுடன் திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
Read more: பிளாஸ்டிக் நாற்காலிகளில் இதை கவனிச்சிருக்கீங்களா..? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா..?



