தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் பாலிவுட் தரப்பில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘வார் 2’ ஆகிய இரண்டும் ஒரே நாளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டியை சந்தித்தன. தற்போதைய வசூல் நிலவரத்தின்படி, ‘கூலி’ படம் மீண்டும் ஒருமுறை மேலேறி, 14-வது நாளான நேற்று ரூ.4.50 கோடி வரை வசூலித்துள்ளது. கூலி திரைப்படத்தின் இந்தியா வசூல் தற்போது ரூ. 268.75 கோடியை தொட்டுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
மாற்றாக, அயன் முகர்ஜி இயக்கிய ‘வார் 2’, ரிலீஸ் ஆன 14-வது நாளில் ரூ. 2.50 கோடி மட்டுமே வசூலித்தது. இது ஹ்ரிதிக் ரோஷனின் படத்திற்கு எதிர்பார்க்கப்படாத பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மிகக் குறைவாக ஊடகங்களில் பேசப்பட்டாலும், அஷ்வின் குமாரின் அனிமேஷன் திரைப்படம் ‘மஹாவதார் நரசிம்ஹா’ தனது 34-வது நாளிலும், கவனிக்கத்தக்க அளவில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்திய திரையரங்குகளில் இதுவரை ரூ. 237.10 கோடி வசூலித்து, இந்த வகை படங்களுக்கு புதிய அளவுகோலாக மாறியுள்ளது.
இந்த சூழலில், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்த ‘பரம் சுந்தரி’ திரைப்படம் வெளியாகவுள்ளதால், மஹாவதார் நரசிம்ஹா, வார் 2 உள்ளிட்ட படங்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது புதிய படங்கள் கவனத்தை ஈர்க்குமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
Read More : சரிந்தது ‘கூலி’ சாம்ராஜ்யம்..!! 15 நாள் ஆகியும் இவ்வளவு தான் வசூலா..? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!