அதிசய உணவாகும் பழைய சோறு..!! 200 நோய்களுக்கு ஒரே தீர்வு..!! சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அதிரடி ஆய்வு..!!

Rice 2026

நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவான ‘பழைய சோறு’ வெறும் ஏழைகளின் உணவு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் மருத்துவப் பொக்கிஷம் என்பதை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வு உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் மகப்பேறு காலங்களில் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பழைய சோறு மற்றும் அதன் தண்ணீரில் (நீராகாரம்) இருப்பது இந்த ஆய்வின் மூலம் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 நோயாளிகளுக்கு தொடர்ந்து பழைய சோறு நீர் வழங்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இதன் முடிவில், இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உடலின் மிக முக்கியமான உறுப்புகளை பாதுகாப்பதில் பழைய சோறு முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்றைய அவசர கால உணவு முறையினால் ஏற்படும் வயிறு சார்ந்த உபாதைகள் மற்றும் நாள்பட்ட செரிமான கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைவதோடு, நோயாளிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவீன மருத்துவ உலகில் விலை உயர்ந்த மருந்துகளை தேடி ஓடும் சூழலில், மிக எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த நீராகாரம், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. குறிப்பாக, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் காரணிகள் இதில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது. பாரம்பரியத்தை மறந்து துரித உணவுகளுக்கு அடிமையாகி வரும் இளம் தலைமுறையினர், மீண்டும் இத்தகைய இயற்கை உணவுகளுக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.

Read More : FLASH | தமிழ்நாட்டில் உதயமானது புதிய கட்சி..!! யாரும் எதிர்பாரா நேரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட காடுவெட்டி குரு மகள்..!!

CHELLA

Next Post

"வெள்ளியில் முதலீடு செய்யப் போறீங்களா"..? 2026-இல் லாபம் சம்பாதிக்க நிபுணர்கள் தரும் மாஸ்டர் பிளான் இதோ..!!

Wed Jan 7 , 2026
முதலீட்டு சந்தையில் தங்கம் எப்போதுமே ராஜாவாக கருதப்பட்டாலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளி நிகழ்த்திய அதிரடி மாற்றங்கள் முதலீட்டாளர்களை மலைக்க வைத்துள்ளது. கடந்த டிசம்பர் 29, 2025 அன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஒரு கிலோ வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் 2.50 லட்சத்தை தாண்டி, ரூ.2,54,174 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால், இதே உச்சத்தை தொட்ட சில மணி நேரங்களிலேயே லாபத்தைப் பிரித்தெடுக்கும் (Profit […]
Silver 2025

You May Like