“தமிழ்த் தீ பரவட்டும்.. பராசக்தி படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்..” கமல்ஹாசன் வாழ்த்து..!

sivakarthikeyan kamalhaasan

சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது..சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகின்றனர்..  


இந்த நிலையில் பராசக்தி படம் குறித்து நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்த் தீ பரவட்டும்! அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்.

பின்குறிப்பு : பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது. உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் திருமதி சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பராசக்தி படம் உருவாகி உள்ளது.. சென்சார் கட்டிற்கு பிறகு பராசக்தி படத்தில் இந்தி திணிப்பு தொடர்பான சில குறிப்பிட்ட வசனங்கள் மற்றும் வாசகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : Breaking : ஜனநாயகன் சென்சார் சான்று விவகாரம்..! உச்சநீதிமன்றத்தை நாடிய படக்குழு..! எப்போது விசாரணைக்கு வரும்?

RUPA

Next Post

மற்றொரு இந்து நபர் கொடூரமாக தாக்கப்பட்டு, விஷம் கொடுத்து கொலை..! வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்..!

Sat Jan 10 , 2026
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கதோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜாய் மகாபத்ரோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாய் ஒரு உள்ளூர் கடைக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் ஒரு உள்ளூர்வாசியால் தாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். ஜாய் சில்ஹெட் […]
bangladesh violence

You May Like