அம்பேத்கர் வழியில் மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாப்போம்.. தவெக தலைவர் விஜய் பதிவு..!

vijay ambedkar 2

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. இந்த நாளில் அம்பேத்கரின் சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.. மேலும் சமத்துவக் கொள்கைகள், சமூக நீதிக்கான போராட்டம், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உரிமை பெற்றுத்தந்த பங்களிப்புகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அம்பேத்கருக்கு புகழாரம் சுட்டி வருகின்றனர்..


கல்வி, சமத்துவம், மனித உரிமைகள் ஆகியவற்றில் அம்பேத்கரின் சிந்தனைகள் இன்னும் இந்திய சமூகத்தைக் கட்டமைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதைக் குறிப்பிடும் நாளாக அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது..

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அம்பேத்கரின் நினைவு நாளுக்கு அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : விஜய் உடன் நடந்த ரகசிய மீட்டிங்.. தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியா? செல்வப்பெருந்தகை பரபரப்பு தகவல்.!

RUPA

Next Post

விருச்சிக ராசியில் புதன்.. இந்த ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்..! பணத்திற்கு பஞ்சமே இருக்காது..!

Sat Dec 6 , 2025
புத்தியின் அதிபதியான புதன், இந்த மாதம் 7 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிப்பதால், எந்தத் துறையிலும் இருப்பவர்களின் லட்சியம் அதிகரிக்கும். உயர்ந்த லட்சியங்களும் உயர்ந்த இலக்குகளும் உருவாகும். குறிப்பாக உயர் பதவிகளில் கவனம் செலுத்தப்படும். அவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க வலுவான முயற்சிகளை மேற்கொள்வார்கள். புதனின் இந்தப் பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களுக்கு சாதக பலன்கள் கிடைக்கும்.. […]
zodiac yogam horoscope

You May Like