“ஆரம்பிக்கலாம்..” விஜய்யின் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்..!

jananayagan poster

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..


அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.. மக்கள் கூட்டத்திற்கு நடுவே விஜய் நிற்கிறார்.. அவர் மீது அனைவரும் கை வைத்திருக்கும் படி போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.. ஆரம்பிக்கலாம் என்று பதிவிட்டு கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.. விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்..

Read More : பளார் விட்ட சரவணன்.. குமாரை நினைத்து வருந்தும் அரசி.. பழனி செய்யப் போவது என்ன..? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்..

RUPA

Next Post

குரு பலமாக இருந்தால், ஒரு போதும் இழப்பு இல்லை! இந்த 4 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் வெற்றி தான்.!

Thu Nov 6 , 2025
ஜோதிடத்தில், குரு அறிவு, செல்வம், கௌரவம் மற்றும் அதிர்ஷ்டத்தின் கிரகமாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் வலுவான நிலை பெற்றவர்கள் தொழில் முன்னேற்றம், நிதி செழிப்பு மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றியைப் பெறுவார்கள். குருவின் ஆசீர்வாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு உள்ளது என்றும் இந்த ராசிக்காரர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாக்பாட் போன்ற நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்றும் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் குருவின் சிறப்பு ஆசிகளைப் பெறும் […]
w 1280h 720imgid 01k0twbaavjv89xrpf4z4v41ygimgname gettyimages 1314493162 1753248803163 1

You May Like