எல்.ஐ.சி பாலிசி.. ஒரு நாளைக்கு ரூ.253 முதலீடு செய்தால்.. ரூ. 54 லட்சம் பெறலாம்..

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐச்.சி (LIC) நாடு முழுவதும் உள்ள பாலிசிதாரர்களுக்கு பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக ஓய்வூதியம் அல்லது குழந்தைகளின் திருமணத்திற்கு உதவும் வகையில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன… அத்தகைய பிரபலமான எல்ஐசி திட்டங்களில் ஒன்று எல்ஐசி ஜீவன் லப் பாலிசி.

lic jeevan labh yojnaa 1498278698

இந்த காப்பீட்டுத் திட்டம் பிப்ரவரி 1, 2020 அன்று எல்ஐசியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த பாலிதாரரர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், பாலிசிதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் நிதி உதவியைப் பெறுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், காப்பீட்டுக் கொள்கையின் கீழ் நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை வழங்கப்படுகிறது.

மேலும், எல்ஐசி ஜீவன் லப் பாலிசியில் பாலிசிதாரர் தனது முதலீட்டின் மீது கடன் பெறலாம் என்ற விதிமுறையும் உள்ளது. முதலீட்டாளர் 16 ஆண்டுகள் அல்லது 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம், இதற்காக பாலிசிதாரர் முறையே 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

ஒரு பாலிசிதாரர் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் பிரீமியத்தைச் செலுத்தலாம். 8 வயது 59 வயது உள்ள யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.. எல்ஐசி ஜீவன் லப் பாலிசியில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகையை எடுக்கலாம். முதலீட்டில் உச்ச வரம்பு இல்லை. மேலும், முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80வது பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

தினமும் ரூ.253 முதலீடு செய்து ரூ.54 லட்சத்தை பெறுவது எப்படி?நீங்கள் 25 வயதுடையவராக இருந்து, எல்ஐசி ஜீவன் லாப் பாலிசியை 25 வருட முதிர்வுக் காலத்திற்கு வாங்கினால், முதிர்வின் போது ரூ.54.50 லட்சம் வரை பெறலாம். இதற்கு, நீங்கள் ரூ.20 லட்சம் அடிப்படைத் தொகையைத் தேர்ந்தெடுத்து, ஆண்டு பிரீமியமாக ரூ.92,400 அல்லது ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.253 செலுத்த வேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முழு முதிர்வு மதிப்பு ரூ.54.50 லட்சமாக இருக்கும்.

RUPA

Next Post

#Breaking : உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.. ஷாக்கில் இபிஎஸ்..

Fri Sep 30 , 2022
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த […]
eps admk

You May Like