கோவையில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபப்ட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படார்.
ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய சிவகங்கை மாவட்டத்தை சேர்த்த காளீஸ்வரன், தவசி, கருப்பசாமி ஆகிய மூவரை, 3-ம் தேதி நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகள், விசாரணை மற்றும் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து 126 நாளில் இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. கடந்த ஜனவரி 8-ம் தேதி 270 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வாழங்கி உள்ளது..
தொடர்ந்து குற்றவாளிகள் 3 பேருக்குமான சிறை தண்டனை விதிக்கப்பட்டது.. அதன்படி குற்றவாளிகள் 3 பேரும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Read More : பாஜக – தவெக கூட்டணி உருவாகிறதா..? விஜய்க்கு எத்தனை தொகுதிகள்..? பரபரக்கும் அரசியல் களம்..!



