Breaking : ஊட்டி, கொடைக்கானல் போல் இனி வால்பாறை செல்லவும் இ பாஸ் கட்டாயம்! எப்போது முதல் தெரியுமா?

valparai weather 1024x512 1

ஊட்டி, கொடைக்கானலை போல் வால்பாறையி செல்லவும் நவம்பர் 1 முதல் இ பாஸ் கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.. அரசு பேருந்துகளை பயன்படுத்ஹ்ட ஊக்குவிக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.. இது தொடர்பான இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் என்றும் ஐஐடி, ஐஐஎம் குழுவினர் தெரிவித்தனர்..


இதையடுத்து ஐஐடி, ஐஐஎம் குழுவினருக்கு தேவையான தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்க ஏதுவாக தலைமை செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..

மேலும் ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு அதிகளவில் வருவதாக நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தெரிவித்தார்.. அப்போது நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலை விட வால்பாறை, ஆணைமலை, டாப் ஸ்லிப் ஆகியவை சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் தீவிரமான பகுதிகள் அதனால் வால்பாறையின் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து இபாஸ் நடைமுறையை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.. மேலும் வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து சோதனை நடத்தவும் உத்தரவிட்டனர்..

Read More : ரோபோ சங்கரின் உடல் தகனம்.. கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த குடும்பத்தினர்.. மீளா துயரில் திரையுலகம்!

RUPA

Next Post

இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப ஆபத்தானவங்க.. சதி செய்வதில் கில்லாடிகள்! கவனமா இருங்க!

Fri Sep 19 , 2025
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது… சிலர் மிகவும் நல்லவர்களாக இருக்கும் நிலையில் சிலர் கெட்ட எண்ணங்களைக் கொண்டுள்ளனர். சிலர் இயல்பாகவே சதி செய்து வெற்றி பெறும் மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்களை ஆளும் கிரகங்களும் ராசிகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். எந்த ராசிக்காரர்கள் சதி செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.. மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புடையவர்கள். நீங்கள் அவர்களை நம்பி எந்த […]
zodiac dangerous

You May Like