தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் கூடிய 3240 பார்கள் உள்ளன.. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.120 கோடி முதல் 130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது.. வார இறுதி நாட்களில் ரூ.140 கோடி முதல் ரூ.150 வரை உயரும். குறிப்பாக பண்டிகை காலங்களில் மது விற்பனை 15% அதிகரிக்கும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் சுமார் 800 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்துள்ளது.. அக்.18-ம் தேதி ரூ.230 கோடி, அக்,19-ம் தேதி ரூ.293 கோடி, அக்டோபர் 20-ம் தேதி ரூ.266 கோடி என மொத்தம் 780 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது.. அடுத்தபடியாக ரூ. சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடி, சேலத்தில் 153 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது..
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு ரூ.790 கோடியாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட இரு மடங்கு மது விற்பனை அதிகமாகி உள்ளதால், தமிழகத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே குறிக்கிறது..
Read More : மாணவர்களே நாளையும் விடுமுறை..? இந்த மாவட்டங்களுக்கு மட்டும் தான்..? வெளியாகும் குட் நியூஸ்..!!



