தனது 70 ஆண்டு கால திரை வாழ்க்கையில் சரோஜா தேவி பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்களின் முழுப் பட்டியலை பார்க்கலாம்..
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது முதிர்வு காரணமாக பெங்களூருவின் மல்லேஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.. ‘கன்னடத்து பைங்கிளி’ ‘அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவர் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
கன்னட சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்டங்களில் நடித்தவர் சரோஜா தேவி.. இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுகிறார். சரோஜாவின் மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் விருதுகள், மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் வென்றுள்ளார் மேலும் 2008 ஆம் ஆண்டில், இந்தியாவின் 60 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். 1992 இல் பத்ம பூஷண் மற்றும் 1969 இல் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. தனது 70 ஆண்டு கால திரை வாழ்க்கையில் சரோஜா தேவி பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்களின் முழுப் பட்டியலையும் பார்க்கலாம்..
தேசிய அளவிலான விருதுகள்
இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2008)
பத்ம பூஷண் (1992)
பத்ம ஸ்ரீ (1969)
மாநில விருதுகள்
தமிழ்நாடு அரசின் கலைமாமணி வாழ்நாள் சாதனையாளர் விருது (2009)
கர்நாடக அரசின் டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது (2009)
2009 ஆம் ஆண்டிற்கான ஆந்திர அரசின் NTR தேசிய விருது இரண்டாவது முறையாக
2001 ஆம் ஆண்டிற்கான ஆந்திர அரசின் NTR தேசிய விருது
தமிழ்நாடு அரசின் MGR விருது (1993)
கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது (1988)
கர்நாடக அரசின் அபிநந்தன-காஞ்சன மாலா விருது (1980)
குல விளக்கு (1969) படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
கர்நாடகத்தால் கௌரவிக்கப்பட்ட அபிநய சரஸ்வதி (1965)
பிற விருதுகள்
பிரஜாவாணி சினி சம்மனாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2024)
நாட்டிய கலாதர் விருது— தமிழ் சினிமா, பரத் கலாச்சார், சென்னை (2009)
கர்நாடக தெலுங்கு அகாடமியின் குறிப்பிடத்தக்க சாதனைக்கான என்டிஆர் விருது (2007)
சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை வழங்கும் ரோட்டரி சிவாஜி விருது (2007)
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் (2006)
தமிழ் சினிமாவின் பங்களிப்புக்கான விஜய் விருது (2006)
ஆல்ரவுண்ட் சாதனைக்கான தினகரன் விருது (2003)
சென்னையில் சினிமா எக்ஸ்பிரஸ்-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் (1997)
பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது – தெற்கு (1994)
Read More : சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.. CM ஸ்டாலின் இரங்கல்..