46 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.. ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கமல்ஹாசனும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த தகவல் வெளியானது இந்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளது..
முதலில் ரஜினி – கமல் நடிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது.. ஆனால் லோகேஷ் இந்த படத்தை இயக்கமாட்டார் என்று தகவல் வெளியானது.. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குநராக பொறுப்பேற்கக்கூடும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷின் கதை மிகவும் சீரியசாகவும், ஆக்ஷன் நிறைந்ததாகவும் இருந்ததாம்.. ஆனால், அதே நேரத்தில் ரஜினிகாந்த் லைட்டான, வேடிக்கையான ஒரு கதையை விரும்பினாராம்.. நெல்சன் தனது காமெடி கலந்த மாஸ் படமாக இயக்குவதால் அவர் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் சமீபத்தில் இந்த படம் குறித்து பேசினார்.. மேலும் படத்தின் இயக்குனர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படவில்லை என்றும் கூறினார். மறுபுறம், ரசிகர்கள் இன்னும் இரண்டு ஜாம்பாவான்களும் எந்த நல்ல இயக்குனருடனும் இணைந்து பணியாற்றுவதைக் காண நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் உள்ளனர்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கடைசியாக நினைத்தாலே இனிக்கும் (1979) படத்தில் இணைந்து நடித்தனர். இதை தொடர்ந்து தனித்தனியாக கவனம் செலுத்திய இருவர்ம் தங்கள் நடிப்பு திறமை மூலம் உலகளாவிய ஜகான்களாக மாறிவிட்டனர்.. மேலும் அவர்களின் மறு இணைவு ஏக்கத்தை மட்டுமல்ல, தமிழ் சினிமா உருவாக்கப்படும் விதத்தை மாற்றக்கூடிய ஒரு நிகழ்ச்சியையும் உறுதியளிக்கிறது. ரஜினி, கமல் இணையும் இந்த படம், இதுவரை திட்டமிடப்பட்ட மிகப்பெரிய தென்னிந்திய படங்களில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : Flash : நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிந்ததால் பதற்றம்..!



