அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுக உள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர் அடுத்து கைதி படத்தை இயக்கினார். இந்த படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறி உள்ளார்.
தற்போது அவர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘கூலி’, இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாணி காயிதம், கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் லோகேஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தற்போது தாய்லாந்தில் தீவிர தற்காப்புக் கலைப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜின் நடிப்பில் உருவாகும் இந்த ஒரு அதிரடியான ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்-இயக்குனர் ஒரு சவாலான பாத்திரத்திற்காக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனது மாற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் பயிற்சி பெற்று வந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படப் பணிகள் பாதிக்கப்படாமல் லோகேஷ் பார்த்து கொள்கிறார்.. மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷனிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் படத்தை முடித்தவுடன், கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தின் இரண்டாம் பாகத்தில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆமிர் கானுடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது., மேலும் இந்தப் படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே ரஜினியின் கூலி படம் ஒரு தனித்த படம் என்றும் அதன் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) ஒரு பகுதியாக இருக்காது என்றும் லோகேஷ் கனகராஜ் தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ஒரிஜினல் இயக்குனர்.. டாக்டர் பட்டம் வாங்கிய அட்லீயை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்..