வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. மேலும் பாலிவுட்டின் உச்ச நடிகர் ஆமிர்கான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது… இதனிடையே படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் ஜாம்பவான் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் 375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. எனினும் படம் ரிலீசாவதற்கு முன்பே, இப்படம் ப்ரீ ரிலீஸ் வணிகத்தில் லாபம் ஈட்டி வருகிறது.. படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 90% பணத்தை சன் பிக்சர்ஸ் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் இயக்குனர் கூலி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.. ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தத்தின் புனித நீராடிய லோகேஷ், கோயிலுக்குள் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினர்.. பின்னர் சாமி தரிசனம் செய்த அவர் கோயில் பிரஹாரத்தையும் வலம் வந்தார்..