இன்றைய நவீன உலகில், கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகளை போலவே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டன. இந்நிலையில், உங்கள் கிரெடிட் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டுவிட்டால் பயப்படாமல் உடனடியாக செய்ய வேண்டிய 6 முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடனடி புகார் : உங்கள் கார்டு தொலைந்ததை அறிந்தவுடன் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணை உடனடியாக அழைத்து, உங்கள் கிரெடிட் கார்டை தற்காலிகமாக பிளாக் அல்லது ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் 24 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவைக்கு உதவி எண்களை வழங்குகின்றன.
மொபைல் அப்ளிகேஷன் : தொழில்நுட்ப கோளாறுகளால் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் அல்லது இன்டர்நெட் பேங்கிங் தளத்தை பயன்படுத்தலாம். இந்த வசதிகளில், உங்கள் கார்டை உடனடியாக அல்லது தற்காலிகமாக பிளாக் செய்வதற்கான விருப்பத்தை வழங்கும்.
சமீபத்திய பரிவர்த்தனைகளை சரிபாருங்கள் : உங்கள் கார்டு தொலைவதற்கு முன்பு அல்லது அதன்பின் நடந்திருக்கக்கூடிய சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய, உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கை மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் முரண்பாடு இருந்தால், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
FIR பதிவு செய்யுங்கள் : உங்கள் கார்டை பயன்படுத்திப் பெரிய நிதி மோசடி நடந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தாலோ அல்லது உங்கள் அடையாளத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்தாலோ, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசியம்.
அல்லது https://cybercrime.gov.in/ என்ற தேசிய சைபர் குற்ற அறிக்கை இணையதளத்தின் மூலமும் புகாரைப் பதிவு செய்யலாம். இந்தப் பதிவு, எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும்போது மிக முக்கியமான ஆதாரமாக இருக்கும்.
புதிய கிரெடிட் கார்டு : பழைய கார்டை பிளாக் செய்த பிறகு, இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ அல்லது நேரடியாக வங்கிக் கிளைக்கு சென்றோ புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். சில வங்கிகள் புதிய கார்டு வழங்குவதற்கு சிறு கட்டணம் வசூலிக்கலாம். புதிய கார்டு கிடைத்தவுடன், அதைச் செயல்படுத்துவது மிகவும் அவசியம்.
Read More : காலையில் எழுந்தவுடன் இந்த பானத்தை மட்டும் குடித்து பாருங்க..!! கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!