’நிறைய பாகுபாடு’..!! ’எந்தவொரு பெரிய ஹீரோவும் எனக்கு வாய்ப்பு கொடுக்கல’..!! நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை..!!

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை அடுத்து தற்பொழுது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிகம் நடிப்பதற்கான காரணத்தை கூறினார்.


இதுகுறித்து அவர் பேசுகையில், “காக்கா முட்டை படத்திற்கு பின்னர் என்னை நிறைய பேர் அழைத்து பாராட்டினார்கள். ஆனால் யாரும் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை.  தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, துல்கர் போன்ற நடிகர்கள் கூட பாராட்டினார்கள். ஆனால், அவர்களும் வாய்ப்பளிக்கவில்லை. காக்கா முட்டை படத்துக்கு பின் ஒன்றரை வருஷமா சும்மா தான் இருந்தேன். அதனால் தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களை அதிகளவில் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தேன். 

இங்கே ஹீரோ, ஹீரோயின் இடையே நிறைய பாகுபாடு உள்ளது. இதுவரை 15 பெண்கள் சார்ந்த படங்களில் நடித்துவிட்டேன். இருந்தும் இன்றுவரை எந்த ஒரு பெரிய ஹீரோவும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவர்கள் ஏன் என்னை அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என கவலையில்லை. எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

ரஜினியுடன் நடித்த 3 நடிகைகளுமே இப்படித்தானா..? அடிக்கடி புருஷனை மாற்றி பரபரப்பை கிளப்பும் நடிகைகள்..!!

Fri Jul 7 , 2023
இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் பழைய எனர்ஜியுடன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுவும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுடன் அவர் ஆடிய பாடல் நேற்று வெளியாகி இணையத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியுடன் படத்தில் நடித்த நடிகைகள் சொந்த வாழ்க்கையில் 3 திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த 3 நடிகைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், முதல் இரண்டு திருமண வாழ்க்கையும் பாதியிலேயே முடிவுற்றாலும் 3-வது கணவருடன் தற்போது […]
take selfies and chat with the superstar rajinikanth to meet his fans for 4 days from may 15 e1673696610720

You May Like