7 நிமிடங்களில் ரூ.850 கோடி நகைகள் கொள்ளை..! உலகின் டாப் அருங்காட்சியகத்திற்கு இதுதான் பாஸ்வேர்டா? அதிர்ச்சி தகவல்!

louvre museum 1

பிரான்சின் பிரபலமான லூவ்ர் (Louvre) அருங்காட்சியகம் தற்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காரணம் அதில் பயன்படுத்தப்பட்ட கண்காணிப்பு (Surveillance) அமைப்பின் பாஸ்வேர்டு “Louvre” என்ற ஒரு சாதாரண வார்த்தை மட்டுமே இருந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. $102 மில்லியன் (சுமார் ₹850 கோடி) மதிப்புள்ள நகை கொள்ளைக்குப் பிறகு இந்த தகவல் வெளியாகி உள்ளது.


7 நிமிடங்களில் நடந்த கொள்ளை

ABC செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த கொள்ளை லூவ்ரின் ‘அப்பல்லோ கலரி’ (Apollo Gallery) பகுதியில் வெறும் 7 நிமிடங்களில் நடைபெற்றது. கொள்ளையர்கள் மிகவும் திட்டமிட்டு, அலாரம் மற்றும் கேமராக்களை தாண்டி செயல்பட்டனர்.

பிரான்ஸ் காவல்துறை அதிகாரிகள் 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.. 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர்.. இவர்கள் செயின்-செயிண்ட்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் யாருக்கும் பெரிய குற்றச் சம்பவங்களுடன் (Organised Crime) தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் வழக்கறிஞர் லாரே பெக்குவோ (Laure Beccuau) இதுகுறித்து பேசிய போது “இவர்கள் எல்லாம் உள்ளூர் சிறு குற்றவாளிகள். ஆனால் சமீபத்தில் பெரிய குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இத்தகைய பின்னணியிலிருந்தே வருகின்றனர்.” என்று தெரிவித்தார்..

ஒரு சந்தேக நபருக்கு முன்பு 11 குற்றச்சாட்டுகள் இருந்தன, அதில் 10 கொள்ளை சம்பவங்கள் தொடர்புடையவை. மற்றொருவருக்கு 15 குற்றச்சாட்டுகள், அதில் 2 கொள்ளைகள் அடங்கும். பாரிஸ் வழக்கறிஞர் லாரே பெக்குவோ (Laure Beccuau) இதுகுறித்து பேசிய போது “அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இல்லை. பெரிய குற்ற சம்பவங்களுடன் தொடர்பில்லாத சிலர் கூட மிகக் குறுகிய காலத்தில் மிகவும் கடுமையான குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்,” என்று தெரிவித்தார்…

கொள்ளையர்கள் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த விதம்

அவர்கள் லாரி மீது பொருத்திய ஏணியை (Truck-mounted ladder) பயன்படுத்தி, அருங்காட்சியகத்தின் மேல்தள ஜன்னல் வழியாக நுழைந்தனர். அது நேரடியாக அப்பல்லோ கேலரியைச் சென்றடைந்தது. உள்ளே சென்றதும், அவர்கள் இரண்டு பலப்படுத்தப்பட்ட கண்ணாடி பெட்டிகளை உடைத்து, 9 உயர்மதிப்புள்ள நகை துண்டுகளை எடுத்துச் சென்று பாரிஸ் இரவின் இருளில் மறைந்தனர்.

பாதுகாப்பு குறைபாடு – கடும் விமர்சனம்

லூவ்ரின் கண்காணிப்பு அமைப்பின் கடவுச்சொல் “Louvre” என்றே இருந்தது என்பது வெளிப்படையாகியதும், மின்னணு பாதுகாப்பு நிபுணர்களும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம், உலகின் முக்கிய கலாச்சாரச் சின்னங்களில் கூட அடிப்படை சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த ஒரு எளிய பிழை எவ்வாறு இத்தனை பெரிய அருங்காட்சியக கொள்ளைக்கு வழிவகுத்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

RUPA

Next Post

“ஆரம்பிக்கலாம்..” விஜய்யின் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்..!

Thu Nov 6 , 2025
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள […]
jananayagan poster

You May Like