இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்..!! வாடகை வீட்டில் முடிந்த வாழ்க்கை..!! ஒரே நேரத்தில் 2 பெண்கள்..!! கடைசியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!!

Sex 2025 1

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த சூரஜ் குமார் என்ற எலக்ட்ரீசியனும், அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர்.


முதலில் நட்பாக பேசி வந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அகன்ஷாவின் தாயார் தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையை தொடங்கியபோது, சூரஜ் குமாரிடம் விசாரித்தனர். ஆரம்பத்தில், “அகன்ஷா என்னுடன் தான் இருந்தார். பிறகு எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சூரஜ் குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும், இதை அகன்ஷா எதிர்த்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும், அகன்ஷா அந்த உறவை கைவிட்டு தன்னைத் திருமணம் செய்ய சொல்லி சூரஜை வற்புறுத்தியதால் சண்டை முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் குமார், காதலி அகன்ஷாவின் தலையை பிடித்து சுவரில் அடித்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, அகன்ஷாவின் உடலை ஒரு பெரிய சூட்கேசில் அடைத்து, அதை யமுனா நதியில் வீசியதாக சூரஜ் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : முதல் கள்ளக் காதலனுடன் உடலுறவு.. வீடியோவை பார்த்து ஷாக்கான 2-வது காதலன்..!! இருவரையும் பார்த்து ஆடிப்போன கணவன்..!! வேலூரில் பயங்கரம்..!!

CHELLA

Next Post

கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சடலங்களை தோண்டி நிர்வாணமாக..!! சிசிடிவியில் தெரிந்த உருவம்..!! நள்ளிரவில் பீதியை கிளப்பிய சம்பவம்..!!

Tue Sep 30 , 2025
மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா நகரில் அடக்கம் செய்யப்பட்ட பெண்களின் கல்லறைகளை தோண்டி, சடலங்களை சிதைக்கும் அருவருப்பான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காண்ட்வாவில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர்கள் மத சடங்குகளை செய்வதற்காக வந்தபோது, கல்லறை திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல, அருகே இருந்த மற்றொரு புதிய கல்லறையும் இதே நிலையில் இருப்பதை கண்டறிந்து, உடனடியாக காவல் நிலையத்துக்குத் […]
Cemetery 2025

You May Like