இன்று ஓடிடியில் வெளியாகும் “லவ் டுடே” மற்றும் பல திரைப்படங்கள்..

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.


அதுமட்டுமல்லாமல், இப்படம் உலக அளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரும் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ‘லவ் டுடே’ இன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரையில் நன்றாக ஓடிய படங்கள் ஓடிடியில் வெளியான பிறகு நெகடிவ் விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கிறது. இந்த படம் ஓடிடி ரசிகர்களை கவரும் என்று பொறுத்திருந்தே பார்க்கலாம்.

மேலும் அசோக் செல்வன் நடித்த “நித்தம் ஒரு வானம்” படமும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பரத் நடிப்பில் வெளியான “மிரள்” படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. SJசூர்யாவின் “வதந்தி” web series இன்று prime வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Newsnation_Admin

Next Post

BB Tamil..!! உடல் முழுவதும் 175 தையல்..!! ஜிபி முத்துவை சரமாரியாக வெட்டிய சகோதரர்..!! உருக்கமான தகவல்..!!

Fri Dec 2 , 2022
டிக்டாக், யூடியூப் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜிபி முத்து தனக்கு, 175 தையல் போடப்பட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர், நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட டிக்டாக் பிரபலமாக இருந்தவர் ஜிபி முத்து. சர்ச்சைக்குரிய பல வீடியோக்களை வெளியிட்டதால் இவரை கைது செய்ய வேண்டும் என்றும், இவருடைய […]
gp muthu3e455 1593927682

You May Like