நேற்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக தமிழ்நாட்டில் பீகார் மக்களை துன்புறுத்துகிறது.. அங்கு பீகாரிகள் தவறாக நடத்தப்படுகின்றனர்.. இது பீகாரின் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம்..” என்று பேசியிருந்தார்.. பிரதமரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. மேலும் “ ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அதே நேரம் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடியை திமுக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகார், ஒடிசாவை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது மோடிக்கு கை வந்த கலை.. தமிழ்நாட்டில் சாதாரண நகராட்சி உறுப்பினர்களுக்கு கூட இப்படி ஒரு எண்ணம் வராது.. ஆனால் பிரதமருக்கு வந்துள்ளது..
நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டிய பிரதமர் மோடி தனது பொறுப்பை மறந்து பேசுகிறார்.. ஒடிசாவில் தேர்தலுக்காக ஒரு தமிழரை எப்படி இழிவுப்படுத்தி பேசினார்களோ அது போல, தற்போது இழிவுபடுத்தி பேசி உள்ளனர். தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம்..
பொய் சொல்வதில் மோடியும் அமித்ஷாவும் ஒருவருக்கு ஒருவருக்கு சளைத்தவர்கள் அல்ல.. பீகார் மக்களிடையே தமிழர்கள் குறித்து அவநம்பிக்கை பரப்புகிறார்.. தமிழர்களையும் தென்னிந்தியர்களையும் அவமானம் செய்தவர்கள் தான் பாஜகவினர்.. மோடி மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் பிளவுப்படுத்தும் அரசியல் செய்கிறார்.. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தாங்க முடியாமல் பாஜகவினர் அவதூறு செய்கின்றனர்..
பிரதமர் மோடியின் கருத்துக்கு திமுக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.. முதல்வரை விமர்சித்த பிரதமர் மோடிக்கு எதிராக ஒவ்வொரு தமிழருக்கும் கண்டன குரலை எழுப்புவார்கள்.. பாஜகவின் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள்.. பீகார் மக்களும் பாஜகவின் பொய்களை அறிவர்.. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பது பிரதமருக்கு தெரியும்.. மோடி 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்த போதும் திமுகவின் செல்வாக்கு குறையவில்லை.
தன்னால் செய்ய முடியாததை ஒரு மாநிலத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் செய்கிறார் என்பது தான் பிரதமரின் பொய்களுக்கு காரணம்.. சிறப்பான திட்டங்களால் இந்தியா முழுவதும் மு.க. ஸ்டாலின் பிரபலம் அடைவதை பிரதமரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது..இந்தி திணிப்பை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.. இந்தி திணிப்பை எதிர்ப்பதால் வடமாநிலத்தவர்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் கிடையாது..
இந்தி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் வளமாக வாழ்கின்றனர்.. 15 ஆண்டுகால நிதிஷ்குமார் ஆட்சியில் பீகார் வளர்ச்சி அடையவில்லை.. அதனால் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்கின்றனர்.. தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் கிடைத்த மருத்துவ வசதியை வட மாநிலத்தவர்கள் பாராட்டி பேசுகின்றனர்..” என்று தெரிவித்தார்..
Read More : பிகாரிகள் பற்றி திமுகவினர் பேசுனதெல்லாம் மறந்துடுச்சா? எதுக்கு இரட்டை வேடம் முதல்வரே? நயினார் காட்டம்!



