பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. சமீபத்தில் ஜாய் தனது தரப்பு நியாயங்களை சமூக வலைத்தளங்களில் விளக்க தொடங்கிய பிறகு, பொதுமக்களின் கருத்து மாற தொடங்கியது. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், ஜாய் கிரிஸில்டா அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேட்டி அளித்து, ரங்கராஜைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளும்படிப் பல தரப்பில் இருந்தும் தன்னை அணுகுவதாகக் குறிப்பிட்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜ், நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டத்தின்படியே உண்மை நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தனக்கு மாதம் 6.5 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
இந்த நிலையில் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் “ மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது..” என்று பதிவிட்டு ஹார்ட் இமோஜியையும் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. எனவே இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஜாய் கிறிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஸ்ருதி இது குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தா.. ஆனால் சமீபத்தில் மூன்றாவது நபர் சட்டப்பூர்வ மனைவியை பிரிக்க முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : வடிவேலு செய்த தவறுக்காக நடிகரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்..!! ப்ப்பா… என்ன மனுஷன் யா..!



