“ மாதம்பட்டி ரங்கராஜ் VIP போல வலம் வருகிறார்.. எனது பிறக்காத குழந்தைக்கு நீதி வேண்டும்..” முதல்வரை அப்பா என குறிப்பிட்டு ஜாய் கிரிசில்டா கோரிக்கை..

joy crizilda madhampatty rangaraj

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..


ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. எனவே இந்த திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஜாய் கிறிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஸ்ருதி இது குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்…

மாதம்பட்டி ரங்கராஜும் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, இப்படி ரங்கராஜும், ஸ்ருதியும் மௌனம் காத்து வந்த நிலையில், ஜோய்கிரிசில்டா மட்டும் புகைப்படங்களையும், மகிழ்ச்சிப் பதிவுகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். மேலும் ரங்கராஜுடன் ஜாய் கிரிசில்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வந்தது.. இதனால் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது..

இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். மேலும் அவர் தனது புகாரில் சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் தற்போது தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் அவர் தெரிவிதிருந்தார்.. 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழும்படி அவரிடம் மன்றாடி வருவதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.. ரங்கராஜிடம் இதுகுறித்து கேட்ட போது, தன்னை தாக்கியதாகவு, அவருடன் பேச முடியாத வகையில் சிலர் தடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்..

சமீபத்தில் ஜாய் கிரிசில்டா, அப்பாவின் அலப்பறைகள் என்று மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என்னடி பண்ற பொண்டாட்டி, லவ் யூ, மிஸ் யூ.. நான் ரூம்க்கு வந்து குளிச்சு, சாப்பிட்டு, காபி குடிச்சுட்டேன்.. என கூறி வீடியோவில் முத்தம் கொடுத்துள்ளார்.. மேலும் மாதம்பட்டி ரங்கராஜை கடவுள் தண்டிப்பார் என்பது போன்ற கருத்துகளை பதிவிட்டு வந்தார்..

இந்த நிலையில் தனக்கு நீதி வேண்டும் என்று கூறி முதல்வர் ஸ்டாலினை அப்பா என்று குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பிரபல சமையல்காரரும் நடிகருமான திரு. மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார் என்று சென்னை நகர ஆணையரிடம் நான் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது.. இப்போது நான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை எனக்குத் தெரியவில்லை.

இதனிடையே, திரு. மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி போன்ற மரியாதை அளிக்கப்படுகிறது, மேலும் அவர் எனக்கு எதிராக அநாகரீகமான, ஆபாசமான சமூக ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார். அப்பா, உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற துரதிர்ஷ்டவசமான பெண்கள் நம்புகிறார்கள். இதில் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி மன்றாடுகிறேன்.

எந்தவொரு விஐபியும் அல்லது ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித் திரிய முடியுமா? எனது பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.. மேலும் தமிழ்நாடு முதல்வரையும், சென்னை மாநகர காவல்துறை மற்றும் கமிஷ்னர் ஆகியோரை டேக் செய்துள்ளார்..

Read More : Flash : குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

RUPA

Next Post

“உன் புருஷனால குழந்தை தர முடியாது.. என் கூட வா”..!! சின்ன மாமனார் செய்த சேட்டை..!! செல்போன் அந்தரங்க வீடியோ..!! மருமகள் எடுத்த முடிவு..!!

Mon Sep 8 , 2025
தெலங்கானாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில் நவீன் மற்றும் யோசிதா என்ற தம்பதி, 8 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையில் குழந்தை இல்லாத குறை ஒரு பெரும் துயரமாக இருந்தது. இந்தச் சூழலில், நவீனின் சின்ன மாமனார் ராமகிருஷ்ணன், யோசிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். குழந்தையின்மையால் யோசிதா மன உளைச்சலில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ராமகிருஷ்ணன், தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ரகசிய […]
Video 2025

You May Like