குக் வித் கோமாளி பிரபலம் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார்.
திரை பிரபலங்கள் தொடங்கி, அரசியல்வாதிகளின் இல்லத் திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் மாதம்பட்டி ரங்கராஜின் உணவு தான் பேமஸ். சமையல் துறையில் நீண்ட நாட்களாக கொடி கட்டி பறக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் அந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.
அதன் பிறகு கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதன் பிறகு தமிழக முழுவதும் பிரபலமான ஒரு செலிபிரேட்டியாக மாறி உள்ளார். ஏற்கனவே பிரபலமாக இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி அறிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். இருப்பினும், அவரது முதல் மனைவி ஸ்ருதி இன்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஸ்ருதி ரங்கராஜ்’ என்ற பெயரிலேயே இருக்கிறார். மேலும், அவர்களது விவாகரத்து சட்டபூர்வமாக இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more: கோட்டை விட்ட தொகுதியில் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக.. கட்சியில் இணைந்த 500 பேர்..!! – EPS ஷாக்