விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பாக மதுரை ஆதீனம் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த சைவ சித்தாந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் சொகுசு காரில் மே 2-ம் தேதி சென்ற போது அவர் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டதாக சொல்லபட்டது.. இதையடுத்து தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக மதுரை ஆதீனம் குற்றம்ச்சாட்டி இருந்தார். குறிப்பாக “குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்” தன்னை கொல்ல முயன்றதாக கூறியிருந்தார்.. இது இரு மதத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பியது..
மேலும் உளுந்தூர்பேட்டை பகுதியில் நடந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டு, ஆதீனம் தரப்பினர் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.. மேலும் தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டியதாக மதுரை ஆதீனம் மீது சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..
இதை தொடர்ந்து தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன் ஜாமீன் வேண்டி மதுரை ஆதீனம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் அளித்திருந்தது..
கடந்த 20-ம் தேதி மதுரையில் உள்ள மடத்திற்கே சென்று ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவலர்கள் விசாரணை நடத்தினர்.. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் அவருக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று காவல்துறை தரப்பு மனு தாக்கல் செய்தது.. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பாக மதுரை ஆதீனம் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வழக்கின் விசாரணையையும் அன்றைய தினம் ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
Read More : ஒன்னு.. குரூப் 4 தேர்வை ரத்து பண்ணுங்க.. இல்லன்னா இதை செய்யுங்க.. அண்ணாமலை காட்டம்..