மதுரையில் பேரதிர்ச்சி..!! துப்பாக்கியால் சுட்டு 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Gun 2025

மதுரை மாவட்டம் புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் வசித்து வந்த வங்கி அதிகாரி வடிவேல் என்பவரது மகன் யுவன் (15). இவர், மேலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை வென்றவர். மேலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக யுவன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளான்.


இந்நிலையில், சமீபத்தில் யுவனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் நேற்று அவரது பெற்றோர் கோவிலுக்குச் சென்றிருந்த நிலையில், யுவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், விபரீத முடிவு எடுத்த யுவன், தான் போட்டிகளுக்குப் பயன்படுத்திய ஏர்கன் துப்பாக்கியைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இரவில் வீடு திரும்பிய பெற்றோர், மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புதூர் காவல்துறையினர், யுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யுவனின் தற்கொலைக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே தேசிய அளவில் சாதிக்கத் தயாராக இருந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Read More : மன்னர்கள் கட்டிய கோயில்..!! எப்போதுமே வற்றாமல் பொங்கி வழியும் நந்தி தீர்த்தம்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

நீங்கள் வாங்கும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வரலையா..? இதோ ஒரே நிமிஷத்தில் சரிசெய்யலாம்..!!

Wed Oct 15 , 2025
மாத சம்பளம் பெறுபவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு செய்யும்போது முழுத் தொகையையும் செலுத்திவிட்டு, பிறகு அரசு வழங்கும் மானியத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் பெற்று வருகின்றனர். ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால், மக்கள் சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் சிலிண்டர் மானியம் திடீரென வருவது நின்று போகும். பலருக்கு மானியம் வருகிறதா? இல்லையா? […]
Gas Subsidy 2025

You May Like