கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் விடுபட்ட பெண்களும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் என்று அறிவிக்கப்பட்டது.. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் இருந்து 16,94,339 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய பயனாளிகளுக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் 12-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பேசிய முதல்வர் மகளிர் உரிமைத்தொகை மேலும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்..
இந்த நிலையில், திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ” தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப்பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!” என்று தெரிவித்துள்ளார்.
Read More : வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! சுங்கக் கட்டணத்தில் 25 சதவீதம் குறைப்பு..!



