நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது.. இந்த கோயிலின் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது..
தீபத்திருவிழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.. இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.. மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்த செல்லப்பட்ட போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றட்டது.. கோயில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.. அதே நேரத்தில் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.. சுமார் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், 2.5 அடி கீழ் விட்டம், 3.75 அடி மேல் விட்டம், 5.75 அடி உயரம் கொண்ட பஞ்சலோகத்தாலான கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது…
அப்போது திரண்டிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய் ஓம், அரோகரா போன்ற கோஷங்களை விண்ணதிர எழுப்பினர். இந்த மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டது.
அப்போது கோயில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்து ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி தருவார்.. 40 கி.மீ வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.. மகாதீபம் ஏற்ற நாளொன்றுக்கு 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்..
இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.. சுமார் 40 லட்சம் பக்தர்கள் மகா தீபத்தை தரிசித்தனர் என்று கூறப்படுகிறது..
Read More : சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த 5 தவறுகள் தான் லட்சுமி தேவி உங்கள் வீட்டை விட்டு வெளியேறக் காரணம்!



