மார்ச் மாதத்தில் ‘மகாலட்சுமி ராஜ யோகம்’ உருவாகவுள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த மகாலட்சுமி ராஜ யோகம் அமைகிறது. இது 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு மட்டுமே அளவற்ற செல்வத்தையும், அபாரமான நிதி வளர்ச்சியையும் பெற்றுத் தரக்கூடியதாக அமையும். அந்த நான்கு ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்..
மார்ச் 16-ஆம் தேதி, சந்திரன் கும்ப ராசிக்குள் பிரவேசித்து, மார்ச் 18-ஆம் தேதி வரை அங்கேயே சஞ்சரிப்பார். அதேபோல், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரகங்களும் தற்போது கும்ப ராசியிலேயே சஞ்சரித்து வருகின்றன. இந்த வரிசையில், ‘திரிகிரக ராஜ யோகம்’ மற்றும் ‘மகாலட்சுமி ராஜ யோகம்’ ஆகியவை உருவாகின்றன. இது குறிப்பிட்ட நான்கு ராசிகளின் செல்வச் செழிப்பை அதிகரிக்கும்.
துலாம்:
மகாலட்சுமி ராஜ யோகத்தின் காரணமாக, இந்த ராசிக்காரர்களின் வாசலில் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவும், மிக விரைவாகவும் நிறைவேறும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகள் குறையும். நிதி ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் சார்ந்தும் அனைத்தும் சிறப்பாக அமையும். பணியிடத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்களுக்குப் பொருளாதார ரீதியான நன்மைகள் வந்து சேரும். வசூலாகாமல் இருந்த பழைய கடன்கள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் இணைந்து புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அனைத்து வகையிலும் அனைத்தும் மிகச் சிறப்பாக அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு, சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜ யோகம் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இந்த ராசிக்காரர்கள் கைவைக்கும் காரியங்கள் அனைத்தும் பொன்னாகப் பலிக்கும். குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் இது மிகவும் சிறப்பான காலகட்டமாக அமையும். செல்வம் பெருகும். அனைத்தும் சுபமாக அமையும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜ யோகம் மிகவும் மங்களகரமானதாக அமையும். இந்த யோகம், இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டு வரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்..
Read More : வீட்டில் இந்த திசையில் துளசி செடி இருந்தால் கவனமாக இருங்க..! வாஸ்து படி பணம் தங்காது..!



