மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களின் ஆத்மாக்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற மிகவும் உகந்த 15 நாட்கள். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆத்மாக்களை சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த முக்கியமான நாட்களில் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்தை பெறக் கூடும். இது குடும்பத்தில் பல துன்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே, மகாளய பட்ச காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆடம்பரப் பொருட்களைத் தவிர்த்தல் : மகாளய பட்ச காலத்தில் தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த 15 நாட்களும் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இந்த நாட்களில் தானம், வழிபாடு மற்றும் சடங்குகள் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
விலை உயர்ந்த பொருட்கள் : இந்த நாட்களில் புதிய வாகனம், சொத்து அல்லது பிற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லதல்ல. இதுபோன்ற செயல்கள், முன்னோர்களை வழிபடும் நம் கவனத்தைத் திசை திருப்பி, அதன் நோக்கத்தைக் குறைத்துவிடும். ஆடம்பர செலவுகளில் கவனம் செலுத்தினால், குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தோலால் செய்யப்பட்ட பொருட்கள் : காலணி, பெல்ட் அல்லது பைகள் போன்ற தோலால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. தோல் பொருட்கள் எதிர்மறை ஆற்றலுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. இதை வாங்குவது, முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும்.
புதிய ஆடைகள் : மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களை குறிக்கும் புதிய ஆடைகளை வாங்கி, தன்னை அழகுபடுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மகாளய பட்சம் என்பது இரக்கம், எளிமை, மற்றும் முன்னோர்களை நினைவுகூறும் காலமாகும். தனிப்பட்ட மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது, முன்னோர்களின் வழிபாட்டில் இருந்து நம் கவனத்தை திசை திருப்பிவிடும். இதனால் குடும்பத்திற்குத் தீமைகள் வரலாம் என்று கூறப்படுகிறது.
Read More : சனிப்பெயர்ச்சி..!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி..? யாருக்கெல்லாம் பண மழை கொட்டும்..?