அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஆண் ஒருவர் நிர்வாணமாக, தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவலின்படி, சந்தேக நபர் அந்தப் பெண்ணை அணுகி தன் ஆடைகளை கழற்றி, விரும்பத்தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வருவதற்குள், குற்றம் சாட்டப்பட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். பின்னர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்தக் காட்சிகளில் பதிவான சம்பவங்கள், விசாரணையில் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது.
அவற்றின் அடிப்படையில், சந்தேக நபர் 30 வயதுகளில் உள்ளவர், தாடியுடன், கிழிந்த ஜீன்ஸ் மற்றும் டெனிம் சட்டை அணிந்திருந்தார் என தெரிய வந்தது. தற்போது, கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தடயங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more: UPI-ல் இன்று முதல் பெரிய மாற்றம்: 2-காரணி அங்கீகாரம் கட்டாயம்.. பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?



