உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, லக்னோவிலிருந்து பரேலிக்கு சென்ற ரயில் மத்தியா மந்திர் அருகே வந்தபோது, ஒரு பயணி ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசினார். இந்தக் காட்சியைக் கண்ட உள்ளூர்வாசிகள், நோட்டுகளை சேகரிக்க விரைந்தனர்.
இந்த சம்பவம் ஃபரித்பூர் பகுதியில் நடந்தது. ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பயணி ஒரு பையில் இருந்த பணத்தை ரயில் ஜன்னலுக்கு வெளியே எறிந்தார். அவை உண்மையான ரூபாய் நோட்டுகள் என்று கண்டறியப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10,000 முதல் 12,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வேகமாக வந்த ரயிலில் இருந்து ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தன. இந்த சம்பவத்தின் வீடியோ யூடியூப் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) போன்ற தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.
இந்த சம்பவம் இரவில் நடந்ததால், உள்ளூர்வாசிகள் மொபைல் டார்ச் உடன் தண்டவாளத்தில் ஓடிவதையும் ரூபாய் நோட்டுகளை சேகரித்ததையும் பார்க்க முடிகிறது..
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். “வழக்கமாக ரயில் அங்கு அதிவேகத்தில் செல்லும். தகவல் கிடைத்த பிறகு நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தோம். ஆனால் ரயில் புறப்பட்டு விட்டது. உள்ளூர்வாசிகள் கலைந்து சென்றுவிட்டனர். இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று ஃபரித்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சாமன் பிரகாஷ் கூறினார்.
இருப்பினும், இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள் ரயில்வே அமைச்சகம் மற்றும் உ.பி. காவல்துறையை டேக் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். காவல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும்.. பணத்தை வீசிய பயணி யார், ஏன் பணத்தை வீசினார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இருப்பினும், இதுகுறித்து யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.. ஒரு விளம்பர ஸ்டண்ட் என்றும் இன்னும் சிலர் இது முட்டாள் தனமான செயல் என்றும் கூறினர்.
இந்த சம்பவம் ரயில்வே பாதுகாப்பு தரநிலைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ரயில்வே அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ பதிலை வழங்கவில்லை.. இது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதாக ஊடக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பயணியை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
Read More : தேசிய நெடுஞ்சாலைத் திட்ட முன்மொழிவு விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு…!



